சற்றே வித்தியாசமான சிந்தனை.
வேடிக்கையானதும் கூட.!
ஆனால் ஜனநாயகத்தின் மாண்பு அதுதான்.!
அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களின் தேர்தல் முடிவு உணர்த்திய உண்மை. கன்னத்தில் அல்ல நெற்றிப்பொட்டில் அறைந்திருந்தது.
கதாசிரியர்களின் கற்பனை வளம் காட்டுவதற்கு அமைந்த களம் என்பதாகவும் சொல்லலாம்.
மேற்கு வங்க வாக்குப்பெட்டிகளின் தேசிய கீதத்தினால் ” ராஜினாமா கடிதம் கூட வாங்க முடியவில்லை.”!
அப்படியே கீழே இறங்கி வாருங்கள் தமிழ்நாடு “அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கூட கிடைக்கவில்லை!”
அண்டை மாநிலமான கேரளம் என்ன சொல்கிறது?
“ராஜினாமா கடிதம் கிடைத்தது. அப்பாயின்ட் மென்ட் ஆர்டரும் கிடைத்துவிட்டன. ஆனால் யாருடைய பெயரும் அதில் இல்லையே!”
இதை வேறு ஜோக்காக நினைக்க வேண்டாம்!












