
மீடியாக்களின் ‘கடமை‘ களில் பிரபலங்களின் கல்யாணம், காதல்,கர்ப்பம் என்பவையும் அடங்கும்.! ஒரு காலத்தில் எட்டுக்கால செய்தி.!
மதராசப்பட்டனம் முதல் தொடங்கி 2.ஓ வரை நடித்தவர் எமி ஜாக்சன். மைக்கேல் ஜாக்சனை விட சென்னை நடிகர்களின் மனம் கவர்ந்தவர்.
இவர் கர்ப்பம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார்.
இன்னும் கல்யாணம் ஆகவில்லை.
அதனால் என்ன? 2015-லிருந்து ஜார்ஜ் என்பவருடன் டேட்டிங். பழகியதில் பிடித்துப்போனவர். மனம் கலந்தவர்கள் உடல் கலப்பது என்ன அவ்வளவு பாவமானதா?
அண்மையில்தான் நிச்சயதார்த்தம் நடந்தது. கிரீசில் கல்யாணம் நடக்கப்போகிறது.












