தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள 237-வது வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து வாக்களித்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அப்பாவும் மகளும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
நடிகர் அஜித் குமார் திருவான்மியூரில் முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகை சினேகா பனையூரில் உள்ள வாக்கு சாவடிக்கு தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் ஜோடியாக வந்து வாக்களித்துள்ளார். அதன்பின் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.நடிகர் சியான் விக்ரம் பெசன்ட் நகரில் உள்ள தன் வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு நடந்தே வந்து வாக்களித்தார். நடிகர் ஜீவாவும் வரிசையில் நின்று வாக்களித்தார். அதேபோல் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் குஷ்பு சுந்தர், மயிலாப்பூரில் தனது வாக்கை செலுத்தினார். வாக்களித்த பின் பேசிய அவர், அனைவரும் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “என் முகத்தில் இருக்கும் புன்னகையே எல்லாம் சொல்லும். ஓட்டு போடுவது எனது மிகப்பெரிய ஜனநாயக உரிமை. ஒரு குடிமகளாக இது எனக்கு ரொம்ப முக்கியம்… மக்கள் முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. முடிவை அவர்களிடம் விட்டுவிடுகிறோம்,” என்று அவர் கூறினார்.நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி ஆர்த்தி உடன் வந்து வாக்களித்துள்ளார். இயக்குநர் அட்லீ, தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் வாக்களித்துள்ளார். நடிகர் சசிகுமார் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் வாக்களித்துள்ளார்.
விஜய் பிரசாரத்தில் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை மற்றும் வெளிர் காக்கி நிற பேண்ட் அணிந்து நடிகர்கள் சிம்பு,சிபிராஜ்.நடிகைகள் ரச்சிதா மகாலட்சுமி, சூர்ய பிரபா உள்ளிட்ட நடிகைகள் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து வந்து வாக்குகளை செலுத்தினர் காக்கிநாடாவில் படப்பிடிப்பில் இருந்த விஷால் அங்கிருந்து கிளம்பி தனது வாக்கினை செலுத்தினார்.நடிகர் ரவி மோகன்
இவர்களைப் போலவே மாநிலம் முழுவதும் வாக்காளர்களுடன் பல பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை காலை தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று மாலை 6:00 மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.












