நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு-சத்யா இணையும், பவன் பாசம்செட்டி (Pawan Basamsetti) இயக்கும்,நாகார்ஜுனா ரெட்டி (Nagarjuna Reddy) , ட்ரீம் மூவீ மேக்கர்ஸ், (Dream Movie Makers) நயவாயு சித்ராலு (Nayavayu Chitralu’s) தயாரிப்பில் ‘தெலுமிழ்’ (தெலுங்கு + தமிழ் ) திரைப்படம் ‘கோல்டன் பாக்கியம்’ (Golden Bhagyam) டைட்டில் கிளிம்ப்ஸ் வெளி யானது.இப்படத்தில் ஜெயஸ்ரீ (Jayashree) மற்றும் அதிராஜ் (Athiraj) கதாநாயகிகளாக நடிக்க, வென்னேல கிஷோர் (Vennela Kishore), சுதர்சன் (Sudharshan), கிஷோர் திருமலா(Kishore Tirumala), ரோகிணி(Rohini), தனிகெள்ளா பரணி (Tanikella Bharani) மற்றும் சுனில் ரெட்டி (Sunil Reddy) ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தை எழுதி இயக்குகிறார் பவன் பாசம்செட்டி . மலையாள சினிமா ஒளிப்பதிவாளர் பப்லு அஜு (Bablu Aju) ஒளிப்பதிவை கையாள, பவன் CH (Pawan CH) இசையமைக்கிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ,ஒரு நகைச்சுவையான குறிப்புடன் தொடங்குகிறது, அதில் ஒரு தெலுங்கரும், ஒரு தமிழரும் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, தங்கள் உணவுதான் சிறந்தது என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள். தெலுங்கு கதாபாத்திரம் கூல் ட்ரிங்குடன் பிரியாணியை ரசிக்கிறது, அதே நேரத்தில் தமிழ் கதாபாத்திரம் சாம்பாருடன் இட்லியை ரசிக்கிறது.
எந்த உணவு சிறந்தது என இரண்டு கதாபாத்திரங்களும் வாக்குவாதத்துக்குள் செல்ல, இன்னொரு நபர் குறுக்கிட்டு இருவர் ருசிப்பதைக் காட்டிலும், அதிசுவை காம்பினேஷன் ஒன்று காத்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் போது காட்சியும், கொண்டாட்டமும் வேறு நிலைக்குச் செல்கிறது.
யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகம் அதைத் தொடர்ந்து வருகிறது. இருவரும் வெள்ளை நிற உடையில் தோன்றுகின்றனர். பின்னர் இயக்குநர் அவர்களின் கதையைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விளக்கத்தை அளிக்கிறார். அது காதலுடன் க்ரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை என்று வெளிப்படுத்துகிறார். அத்துடன், ‘கோல்டன் பாக்கியம்’ கிளிம்ப்ஸ் டைட்டில் வெளியீடு நிறைவடைகிறது
நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இருவரும் இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயவாயு சித்ராலு ஆகிய பேனர்களின் கீழ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.












