டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேஹா அமர் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க இவர்களுடன் பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கியிருக்கிறார். இசை, ஓசேப்பச்சான். ஒளிப்பதிவு பிரசாந்த் பிரணவ்.
தொடர்த் தழீழப்போர் நடந்த காலகட்டத்தின் ஒரு பகுதியில் 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு சந்தர்ப்பத்தில், மனைவியை இழந்த கணவனும் அவரது மகளும் தமிழ் நாட்டிற்கு, மனைவியின் உறவினரைத்தேடி வருகின்றனர். அவர்களை உறவினர்கள் ஏற்க மறுக்க, அதன் பிறகு இவர்களின் வலி மிகுந்த வாழ்க்கை என்ன ஆனது. என்பதை சொல்வது தான் இந்தத் ‘தாய் நிலம்’.
சிங்கள பேரினவாத அரசின் கொடுங்கோல் ஆட்சியினால் பாதிக்கப்பட்டு, தமிழகம் வரும் அப்பாவித் தந்தையாக உறவினர்கள் உதாசீனப்படுத்திய நிலையில், மகளை வைத்துக்கொன்டு வருந்தும் கதாபாத்திரத்தில் அமர் ராமச்சந்திரன் நன்றாகவே நடித்திருக்கிறார். அவரது மகளாக நடித்திருக்கும் சிறுமி நேஹா அமரும் கவனிக்கும்படி நடித்திருக்கிறார்.
உறவினர்கள் கைவிட்ட நிலையில், தந்தைக்கும் மகளுக்கும் தனால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு, பரிவுடன் பாசம் காட்டுபவராக பாலாசிங். இவருடம் ஆட்டோ ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களும் ஹங்களால் இயன்ற ஒத்துழைப்பை கொடுத்திருக்கின்றனர்.
முற்றிலும் வணிக நோக்கம் தவிர்த்து, தன்னால் முடிந்தவரை சிங்கள பேரினவாத அரசின் கொடுங்கோல் ஆட்சியையும் அவர்களால் பாதிக்கப்படும், மக்களையும், அகதிகளாக வரும் மக்கள் மீதான பார்வையையும் சொல்ல முயற்சித்துள்ளார்கள்.
உறவினர்கள் கைவிட்ட நிலையில், அகதிகள் முகாமிற்கு செல்லாததன் நோக்கம் என்ன? போன்ற பல கேள்விகளால், இது ஒரு வலிந்து திணிக்கப்பட்ட படைப்பாகவே இருக்கிறது!
‘தாய் நிலம்’ – உலக வல்லரசுகளால் ஒடுக்கப்பட்ட தமிழீழ வரலாற்றின் ஒரு பக்கம்.












