
தமிழ்ச் சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்டுவது, தகவல்களை பகிர்ந்து கொள்வது என்பது அரிது. வயிறு எரியாமல் இருந்தாலே போதும் என்கிற நிலைமைதான் .! எண்பதுகளுடன் முடிந்து விட்டதோ என்னவோ!
அதனால்தான் நட்புரிமையுடன் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் ‘பொற்காலத்தை ‘ நினைவில் வைத்திருந்து சேரனை பாராட்டி இருக்கிறார்.
“உங்கள் “பொற்காலம்” திரைக் காவியத்திற்கு இன்று 23வது பிறந்தநாள்
இந்த 22 ஆண்டுகளில் நீங்கள் செய்த பரிசோதனை முயற்சிகளும், அதில் கற்றுக்கொண்ட பாடங்களும் ஏராளம்! அவைகள் வரும் காலத்திற்கு நல்ல வழிகாட்டியாக அமையட்டும்
ராஜாவுக்கு செக்”கிற்காக ஆவலாக காத்திருக்கிறேன்” என உதயகுமார் பாராட்ட ,
அதற்கு சேரனும் நன்றி தெரிவித்திருக்கிறார்.

“நன்றி உதயகுமார் அவர்களே.. விரல் நுனில வச்சிருக்கீங்க போல.. பொற்காலம் என்னால் மறக்கமுடியாத அனுபவங்களை தந்த படம்.. 40 நாட்கள் தொடர் மழையிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி 100 நாட்களை கடந்த படம். அந்தப்படத்தின் பாடல்கள், முரளி சார், மீனா மேடம்மின் நடிப்பு…எல்லாம் பசுமையான நினைவுகள்.” என நன்றி தெரிவித்திருக்கிறார்.












