கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த தியேட்டர் ஸ்டிரைக் தமிழக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. திரையரங்குகளில் டிக்கெட் விலையை நிர்ணயிக்க கமிட்டி ஒன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் 6 பேர் தமிழக அரசு அதிகாரிகள். மீதி 6 பேர் திரைத்துறையை சார்ந்தவர்கள். திரைத்துறை சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , கவுரவச் செயலாளர் கதிரேசன் , பொருளாளர் எஸ். ஆர். பிரபு , தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியன் , அருள்பதி ஆகியோர் இடம்பெறுவர். இந்த கமிட்டி தமிழக அரசோடு இணைந்து டிக்கெட் கட்டணம் மற்றவையை முடிவு செய்யும்.