
இந்த வருகை குறித்துப் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன், ‘‘என்னால் நம்ப முடியாத அனுபவம் இது. அமிர்தசரஸ் கோல்டன் டெம்பிளை நேரில் தரிசிக்க வேண்டுமென சிறுவயதிலிருந்தே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இதுநாள்வரை அது நிறைவேறவில்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆற்றலும், சூழ்நிலையும் அங்கிருப்பதை நான் உணர்ந்தேன். அங்குள்ள மனிதர்களின் அன்பும், விருந்தோம்பலும் என்னை மிகவும் கவர்ந்தது. இப்படிப்பட்ட ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் கிடைத்ததற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன்!’’ என்றார்.