நேர்மையான என்கவுண்டர் போலீஸ் அதிகாரி மாதவன்.வட சென்னையின் தாதா விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் தான் விக்ரமும் வேதாளமும். மாதவன் உள்ளிட்ட என்கவுண்டர் டீம், தாதா விஜய் சேதுபதியின் கேங்கை சுற்றி வளைத்து ஒவ்வொருவராக போட்டுத்தள்ள, அங்கே விஜய் சேதுபதி மட்டும் மிஸ்ஸிங்.மாதவன் டீம் விஜய்சேதுபதியை சல்லடை போட்டு தேட, இந்நிலையில், மாதவனை தேடிவந்து தானாக சரண்டராகிறார் விஜய் சேதுபதி. அவர் மாதவனுக்கு ஒரு கதை சொல்கிறார். கதைக்கான விடையை மாதவன் சொல்லும் போது விஜய் சேதுபதி எஸ்கேப்!. அங்கே ஆரம்பித்து ஒவ்வொரு முறை மாட்டும்போதும் கதை சொல்வதும், அந்தக் கதையின் முடிச்சை அவிழ்க்க மாதவன் முயலும்போது அவருக்கு வேறு சில கேள்விகளுக்கு பதில் கிடைப்பதுமாக விறுவிறுப்பாக செல்கிறது திரைக்கதை. இறுதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, விக்ரம், வேதாவை பிடித்தாரா? இல்லையா? என்பதே இதன் சுவாரசியமான மீதிக்கதை! மாதவன் கதையின் நாயகனைப்போலத் தோன்றினாலும், படம் நகர,நகர படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்.எங்கேயுமே உறுத்தலில்லாத, மிகைஇல்லா நடிப்பு, வழக்கம் போலவே இதிலும் ஊதி தள்ளி யிருக்கிறார் விஜய் சேதுபதி. மிடுக்கான போலீஸ் மாதவன்,காவல்துறை அதிகாரியின் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான தேர்வு. ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் ஆகியோரின் பாத்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்கபடவில்லைஎன்றாலும் இருவரும் நிறைவாக செய்துள்ளனர்.வினோத்தின் ஒளிப்பதிவு. சாமின் பின்னணி இசை, படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. டசக்கு டசக்கு பாடல் ஆட்டம் போடத் தோன்றுகிறது கமல் நாசருக்கு ஒரு குருதிபுனல் என்றால் விஜய் சேதுபதி-மாதவனுக்கு விக்ரம் வேதா!புஷ்கரும் காயத்ரியும் வசனம் ,திரைக்கதை என படம் முழுவதும் ரசிகர்களின் கைதட்டலை பெறுகின்றனர்.முதல் பாதி செம விறுவிறுப்பு என்றாலும்,இரண்டாம் பாதியில் ஆங்காங்கே தொய்வு! மொத்தத்தில் ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.