ஐதராபாத்தில்,வேலையில்லா பட்டதாரி-2 பட புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டிருந்த தனுஷ், ஒரு வீடியோ வைரலாக பரவியது. தெலுங்கு சினிமாவின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது,, தொகுப்பாளர் கேட்ட கேள்விகளால் கோபமடைந்து நிகழ்ச்சியின் பாதியிலேயே விருட்டென எழுந்து சென்று விட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து தனுஷ் கூறியதாவது, பேட்டியின்போது நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதற்காக நான் இப்படி நடந்திருக்கக் கூடாது தான். என் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை என்கிறார்.