உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் என்பவரை காதலித்து வருவதாக சமீப காலமாக கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ருதிஹாசனை காண தற்போது மைக்கேல் மும்பை வந்துள்ளாராம். ஸ்ருதிஹாசன் அவரை வரவேற்று தன் காரில் அழைத்து சென்றாராம். மேலும் மைக்கேல் சில நாட்கள் ஸ்ருதிஹாசனோடு மும்பையில் செலவிட உள்ளதாகவும் கூறபடுகிறது.இவர்களின் திருமணத்திற்கு கமல் சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.. ஆனால், இது குறித்து ஸ்ருதி பேசுகையில்,’மைக்கேல் இங்கிருப்பது உண்மை. திருமணம் உண்மையில்லை’ என கூறியுள்ளார்.