இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கு
இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், இப்படத்தின் சிங்கிள் ட்ராக்கை ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். பூம் பூம் என்று தலைப்பை பெற்றுள்ள இப்பாடலின் டீசர் ஜூலை 30 ஆம் தேதியன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பூம் பூம் பாடல் வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
ஸ்பைடர் படத்தை NVR Cinema சார்பில் N.V.பிராசாத் மற்றும் தாகூர் மது தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பின்னனி இசை மற்றும் பாடல்களுக்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். படக்குழுவினர். இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.