தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த், ‘எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று ‘வேலைநிறுத்தம்’.என்றும், சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். என இரு தரப்பினரையும் தாக்கி சற்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.சம்பள பிரச்னை காரணமாக எழுந்த மோதலால் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பெப்சி அமைப்பினர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதன் காரணமாக ரஜினியின் ‘காலா,விஜய்யின் மெர்சல் ’ உட்பட 37 படங்களின் படப் பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தமிழ்த் திரையுலகம் ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று ஆர்,கே.செல்வமணி தலைமையிலான பெப்சி சங்க நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தங்கள்பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று ‘வேலைநிறுத்தம்’. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்’இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.












