நடிகை ஆடுகளம் ஜானகி-திரைப்பட ஒளிப்பதிவாளர் சதிஷ்எம்.எஸ்,ஆகிய இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இருவரும் சென்னையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இருவரின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் லீ மெரிடியன் ஓட்டலில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டு மன மக்களை வாழ்த்தினர்.நடிகை ஜானகி, ஆடுகளம் ,முத்துக்கு முத்தாக ,ரம்மி,சுந்தரபாண்டியன்உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போதும் ஏராளமான படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.ஒளிப்பதிவாளர் சதீஷ் குளிர் 100 டிகிரி,மதில்மேல் பூனை தெரியாம உன்னை காதலிச்சுட்டேன்உள்பட பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது மஞ்சள் குங்குமம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். இப்படத்தில் ஆடுகளம் ஜானகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து கடந்த 11ந்தேதி சென்னையில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.காதலர் தினமான நேற்று அவர்களின் திருமண வரவேற்பு நடந்தது.