சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் மோதல் ஏற்பட்டதால்,பெப்சி அமைப்பின் சார்பில் அதன் தலைவர் செல்வமணி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார் இதனால் ரஜினி படபிடிப்பு உள்பட அணைத்து படபிடிப்புகளும் முடங்கின.நேற்று இப்பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார் பெப்சி நிர்வாகிகள்.அதை தொடர்ந்து ரஜினியும் ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் வேலை நிறுத்தம் என்பது எனக்கு பிடிக்காத வார்த்தை என்றும்,சுய கவுரவம் பார்க்காமல் பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என்றும் இரு தரப்பினரையும் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.ஈநிலையில் இன்று பெப்சி அமைப்பு சார்பில் நடந்த அவசர கூட்டத்தில் வேலை நிறுத்தம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் பணிக்கு திரும்பவுள்ளார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
தற்போது நடந்துவரும் திரைத்துறை சார்ந்த குழப்பங்களுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வகையிலும் காரணமல்ல.இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயித்த சம்பள விதிகளுக்கு உட்பட்ட யாருடனும் படப்பிடிப்பைத் தொடர்வோம்.பெப்சி தொழிலாளர்களை மட்டுமே பணியில் அமர்த்துமாறு நிர்பந்திக்க யாருக்கும் உரிமையில்லை. தொழிலாளர் நலவாரிய அழைப்பை ஏற்று நாளைய கூட்டத்தில் கலந்து கொண்டபின் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.