நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கின் இறுதியில், சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிவாஜி சிலையைஅகற்றும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரங்கள் மூலம் சிலையை வெட்டி எடுத்து லாரியில் ஏற்றி சென்னை அடையாறு பகுதியில் சிவாஜிகணேசன் மணிமண்டபம் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சம்பவம் சிவாஜிகணேசன் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.