ஆரவ்,ஓவியாவின் காதலை ஏற்காததால், தீவிர மன அழுத்தத்தில் இருந்த நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது போல் நேற்று ஒளிப்பரப்பான தொலைகாட்சி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மீடியாக்களிலும் இச் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு தனியார் மருத்துவமனையில், ஓவியாவுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின் அவரை மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க, தொலைக்காட்சி தரப்பு அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால்,தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமில்லாத ஓவியா, கமல்ஹாசனுடன் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, தனது சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ஓவியாவின் தந்தை நெல்சன் சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஓவியாவை பற்றி கூறிய போது “ அவர் எப்போதும் தன்னம்பிக்கை நிறைந்தவர். அவசர கதியில் யாரிடமும் காதலில் விழும் நபர் அல்ல. அவர் நடிக்கவில்லை. அவருக்கு எப்போதும் ஒரே முகம்தான். முன்யோசனை இன்றி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் நபர் அல்ல. அவரை பற்றி எல்லோரும் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால், எதையும் நம்பவில்லை” எனக் கூறியுள்ளார்.