வினீத் சீனிவாசன் இயக்கத்தில்,மலையாளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்கு ஆளான படம் ‘தட்டத்தின் மறயத்து’.இதில், நிவின் பாலி, இஷா தல்வர் ஜோடியாக நடித்திருந்தனர். இதில், இந்து,முஸ்லிம், காதலை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டியிருந்தார் இயக்குனர். சரி, விசயத்துக்கு வருவோம் . இப்படம் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் ,தமிழில் ரீ-மேக் ஆகியிருக்கிறது. ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் 1984-ல் ஏற்கனவே,பிரதாப் போத்தன், ராதிகா ஜோடியாக நடிப்பில் வெளியாகியுள்ளது. தற்போது, அதே பெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகிவருவது குறிப்பிடதக்கது.மலையாளத்தில் ‘தட்டத்தின் மறையத்து’ படத்தில் நடித்த இஷா தல்வார்தான் தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். நாசர், மனோஜ் கே. ஜெயன்,தலைவாசல் விஜய்,சிங்கமுத்து, சிங்கம்புலி, வனிதா, சங்கிலிமுருகன் வெங்கி, அர்ஜுன் ஆகியோரும் நடிக்கிறார்கள்
இசை: ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா, பாடல்கள்: நா.முத்துக்குமார், தாமரை, அருண் ராஜா,
நடனம்: பிருந்தா, சந்தோஷ் ஆலன், ராதிகா, சண்டைப் பயிற்சி: விஜய் ஜாக்குவார்.