நடிகர் சிம்புவுக்கு ட்விட்டரில் அதிக பாலோயர்ஸ் உள்ளனர்.அவரும் ட்விட்டரில் அதிக ஈடுபாடு கொண்டு தனக்கு தோன்றிய கருத்துகளை, தகவல்களை துணிச்சலுடன் வெளியிட்டு வந்தார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் இருந்து வந்தது.இந்நிலையில் சிம்பு இன்று திடீரென்று டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகியுள்ளார். இந்த விலகலுக்கு காரணமாக அவர் குறிப்பிட்டுள்ள ட்வீட்டில், ‘‘எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும் நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே! ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் நேர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் ஒரு பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பை தேர்ந்தெடுங்கள்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.