தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் , குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ” அல்வா வாசு “. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தன்னுடைய வாழ்க்கையில் பயணம் செய்தார். அமைதிப்படை , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அருணாச்சலம் , சிவாஜி , நடிகர் சத்ய ராஜுடன் பல படங்கள் என இவர் நடித்த காட்சிகள் மிகவும் பிரபலம். கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 6 மாதங்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இன்று மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை , விரைவில் உயிர் பிரிந்து விடும் அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர் என்றார் நடிகர் அல்வா வாசுவின் மனைவி திருமதி. அமுதா வாசுதேவன். இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.