தன் பேச்சில்மெ எப்போதுமே ‘பொடி’யுடன், வெடி வைத்து பேசும் நடிகர் பார்த்திபன் இன்று மாலை விஜய் நடித்து வரும் மெர்சல் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். வழக்கம் போலவே இங்கும் அவருடைய பேச்சில் வெடி குண்டை வீச தயங்க வில்லை,அவர் பேசுகையில் அரங்கமே அதிர்ந்தது.அப்படி என்னதான் பேசினார் என்கீறீர்களா? ஓபிஎஸும், ஈபிஎஸும் சேர்ந்தால் என்ன ஆகும் என்று எனக்கு தெரியாது, ஆனால், விஜய் ரசிகர்களும், விஜய்யும் இணைந்தால் கண்டிப்பாக அது ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் தான்.மேலும், விஜய் தான் அடுத்து CM, நீங்கள் நினைப்பது புரிகின்றது, நான் சொன்னது Collection Mannan என்பதை தான் என்று பேச அரங்கமே அதிர்ந்தது.