வரும் ஆகஸ்ட்மாதம் 26-ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 26-ம் தேதி தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அன்றைய தினம் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் சண்டைக் கலைஞர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை வைத்தனர்
அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.