சிம்பு தேவன் இயக்கத்தில், வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, 2006-ம் ஆண்டு வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்தப் படம் வடிவேலுவுக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது.இதன் காரணமாக இயக்குனர் சிம்புதேவன் இதன் இரண்டாம் பாகத்தை உரு வாக்கப்போவதாக அறிவித்திருந்தார் .ஆனால் பல்வேறு காரணங்களால் படம் தொடங்குவது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில், கிட்டதட்ட 11 ஆண் டுகளுக்குப் பிறகு இம்சை அரசன் 23-ம் புலிகேசிக்கு அடுத்த பாகம் இன்று முதல் படப்பிடிப்புடன் இன்று தொடங்குகிறது இந்தப் படத்துக்கு இம்சை அரசன் 24-ம் புலிகேசி என தலைப்பிட்டுள்ளனர்.படத்தை ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. சிம்பு தேவன் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்