இந்திய ராணுவத்தில் மிக முக்கிய ரகசிய ஏஜன்ட் அஜித், எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று வாகை சூடும் வல்லவர். இவருடன், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்பட 4 பேர் இருக்கின்றனர். அஜித்தின் காதல் மனைவியாக வருகிறார் காஜல் அகர்வால். ராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது.பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட அதிநவீன ஆயுதம் ஒன்று வெடித்து சிதறுகிறது. இதன் விளைவாக ஏற்படும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழக்கின்றனர். இது மாதிரியான இரு ஆயுதங்கள் இந்தியாவிலும் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அது எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறும் என இந்திய(ரா) உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க இந்திய ரகசிய உளவாளி அஜித்தின் குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த ஆயுதத்தை ஹேக் செய்து வெடிக்கச் செய்தது அக்ஷரா ஹாசன் என்ற தகவல் கிடைக்கிறது. அக்ஷராவை தேடி அலைகிறது அஜித் குழு.இந்நிலையில் கருணாகரன் உதவியோடு அஜித் மற்றும் அவரது குழு அக்ஷராவை கண்டுபிடிக்கிறது. அக்ஷராவிடம் அஜித் நடத்தும் ரகசிய விசாரணையில், அக்ஷரா அதற்கு காரணமில்லை என்பதும், அக்ஷரா ஒரு ஹேக்கர் மட்டுமே என்றும் தெரிய வருகிறது.இந்நிலையில், அக்ஷராவை அஜித்தின் பாதுகாப்பிலிருக்கும் அக்ஷராவை சுட்டுக் கொன்றுவிட்டு, அஜித்தையும் சுட்டுவிட்டு, அந்த ஆயுதங்களை கைப்பற்றி பல ஆயிரம் கோடிக்கு வேறு நாட்டிற்கு அதனை விற்க முடிவு செய்கின்றனர் அஜித்தின் மற்ற நண்பர்கள்.
அதேநேரத்தில் அந்த ஆயுதங்களை அஜித் கடத்திவிட்டதாகவும் தலைமைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அஜித் மரம் ஒன்றில் சிக்கிக் கொள்கிறார். இதையடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை!.
அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இது அமைந்திருக்கிறது. படத்தில் அஜித்தின் மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி நடிப்பில் அஜித் மற்ற நடிகர்களை மிரள வைத்திருக்கிறார். ஒரு ஹாலிவுட் ஹீரோ ஸ்டைலில் தோற்றமளிக்கும் அஜித்துக்கு ராணுவ உடை தனி கம்பீரத்தை கொடுக்கிறது.,
காஜல் அகர்வால் இதுவரை ஏற்று நடிக்காத புதுமையான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அஜித்தின் காதல் மனைவியாக வரும் காஜல் அகர்வாலின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
விவேக் ஓபராய் ஒரு பாதியில் ஹீரோவாகவும், மறு பாதியில் வில்லனாகவும் மாறி ரசிக்க வைக்கிறார். ஹேக்கராக வரும் அக்ஷரா ஹாசன் சில காட்சிகளே என்றாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கருணாகரன் உள்பட செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக், ஆரவ் சவுத்ரி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.வெற்றியின் ஒளிப்பதிவு, ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கிறது.வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா, முற்றிலும் மாறுபட்டு ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் விவேகத்தை கொடுத்திருகிறார்.முதல் பாகத்தில் வேகமாக நறும் காட்சிகள் இரண்டாம் பாதியில் தன வேகத்தை பல இடங்களில் இழந்து விடுகிறது இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் அதே சமயம் விவேக் ஓபராய், அக்ஷரா கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். அனிருத் தின் பின்னணி இசை, படத்திற்கு கூடுதல் பலம்.மொத்தத்தில் `விவேகத்தில் அஜித்தின் கம்பீரம் தெரிகிறது!