நடிகர் கமல்ஹாசன் தமிழக ஆட்சியாளர்களை டுவிட்டரில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
மேலும், தனியார் தொலைகாட்சி ஒன்றில் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியிலும் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கோவையில் நடந்த திருமண விழா ஒன்றில் நடிகர் கமலஹாசன் பேசியதாவது:’இது திருமண விழா அல்ல: இது ஒரு ஆரம்ப விழா. ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதிவிட்டோம். அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நமது கடமை. தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள். தேவைப்படும் போது கோட்டையை நோக்கி புறப்படுவோம், அரசியலில் அமைதியாக இருந்தால் அவமானம், தொடர்ந்து போராடுங்கள், விழித்திருங்கள். போராட்டத்தை இங்கிருந்தே தொடங்குங்கள், இது திருமண விழா அல்லாமல், ஆரம்ப விழாவாக இருக்க வேண்டும்’.இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.கமல் ஹாசனின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.