சிவ கார்த்திகேயன் நடிப்பில்,திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனம் தயாரித்து வரும் ரஜினிமுருகன் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடந்து வருகிறது.இந்நிலையில் சிவ கார்த்திகேயன் தனது பிறந்த நாளான இன்று படப்பிடிப்பு குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்.அவருக்குபடக்குழுவினர் ஆளுயர மாலை அணிவித்து கிரீடம் சூட்டிவாழ்த்தினர்.அவருக்கு,இயக்குனர்கள் லிங்குசாமி,சமுத்திரகனி,பொன் ராம்,துரை. செந்தில் குமார்,நடிகர் ராஜ்கிரண்.கேமிராமேன் பாலசுப்ரமணியம் ,ஸ்டன்ட் சில்வா,ஆர் .டி. ராஜா உள்பட பலர் வாழ்த்து கூறினர்.