இன்று மாலை திருவனந்தபுரத்தில்செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன் அனிதா மரணம் பற்றி வேதனையுடன் கூறியதாவது,
சாதி, கட்சி மதம் கடந்து நியாயத்துக்காக போராட வேண்டும். கட்சிகளை கடந்து போராட வேண்டும். அனிதா என்ற பெண் எனக்கும் பெண்தான். இன்னும் இன்னும் கொடுமைகள் நடந்தால்தான் அரசுகள் தீர்வு தரும் என்றால் நீங்க வேண்டாம். நாங்களே பார்த்துக்கொள்கிறோம். நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். திருமாவளவன் பொங்கி எழவேண்டும். அவர் ஏன் வரவேண்டும் என்கிறேன் என்றால், ஒரு காரணத்துக்காகத்தான் சொல்கிறேன். அவர் நன்றாக கோபப்படுவார். அவர் மட்டுமல்ல எல்லோரும் சேர்ந்து வெகுண்டு எழவேண்டும். மத்திய மாநில அரசுகள், நீதிமன்றங்கள் எல்லாம் நாம் வைத்ததுதான். அங்கே சென்று நன்றாக வாதாட வேண்டும், வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசுகிறார்கள். இந்த விவாகரத்தில் அந்தப்பெண் எந்த ஊர், என்ன சாதி மதம் கட்சி என்றெல்லாம் பார்க்க கூடாது. பேதங்கள் கடந்து நியத்துக்காக நாம் அனைவரும் போராடவேண்டும். அனிதாவின் கனவு மண்ணோடு மண்ணாகிவிட்டது. ஒன்று சேர்ந்து அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் “இவ்வாறு கமல்ஹாசன் கூறினார் .