‘ஆரண்ய காண்டம்’ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு அநீதிக் கதைகள் என்று பெயர் வைத்திருந்தனர்.இந்நிலையில் படத்தின் தலைப்பை சூப்பர் டீலக்ஸ் என்று மாற்றி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் தோன்றும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் பெண் வேதா புகைப்படம் இணையதள ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.