தனது மந்திர இசையால் லட்சக்கணக்கான ரசிகர்களை பல ஆண்டுகளாக கொண்டுள்ள யுவன் ஷங்கர் ராஜா தற்பொழுது சினிமா வணிகத்திலும் தனது கால்களை பதிக்கவுள்ளார். சினிமா மீது அபரிமிதமான காதல் கொண்டவர் யுவன் ஷங்கர் ராஜா. சினிமா கலையின் மேல் தீவிர ஆர்வம் கொண்ட இவர் தற்பொழுது ‘k பிலிம்ஸ்’ நிறுவனத்தோடு சேர்ந்து சினிமா விநியோகத்தில் ஈடுபடவுள்ளார்.
” சினிமாவையும் இசையையும் உண்டு, சுவாசித்து வாழும் சூழலில் பிறந்து வளர்ந்தவன் நான். சினிமா விநியோகத்தில் ஈடு படவேண்டும் என்பது எனக்குள் என்றுமே இருந்தது. ‘K பிலிம்ஸ்” நிறுவனத்தை சார்ந்த ராஜ ராஜன் மற்றும் விஷ்ணு ஆகியோருடனும் , சிறப்பான தொலைநோக்கு பார்வை கொண்ட எனது பங்குதாரர் இர்பானுடன இணைந்து உருவாகியுள்ளதே இந்த ”KYIT”. தற்பொழுது சில படங்களில் ஆரம்பித்து விரைவில் பெரிய அளவில் எங்களது விநியோகத்தை விரிவுபடுத்தவுள்ளோம் ” என்றார் யுவன் ஷங்கர்.