தொழில் பக்தியுடன் செய்யும் தொழிலை ரசித்து, அனுபவித்து செய்வதனாலேயே வெற்றியாளர்கள் மற்றவர்களிலிருந்து வேறுபடுகின்றனர். பிஜி தீவில் முழு வேகத்துடன் நடந்துவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ;பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘பார்ட்டி’யில் நடிகர் சத்யராஜ் அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது. என்றுமே இளமையான துள்ளலோடு இருக்கும் சத்யராஜ் தனது நடிப்பாற்றலால் ஒட்டுமொத்த படக்குழுவையே அசத்தியுள்ளார். இவர் இப்படத்திற்கான தனது 40 நாள் இடைவிடாத படப்பிடிப்பினை முடித்து சென்னை திரும்பியுள்ளார். இவரது நடிப்பையும் அர்ப்பணிப்பையும், மற்றவர்களை ஊக்குவிப்பது பற்றியும் ‘பார்ட்டி’ படக்குழுவே புகழாரம் சூட்டிவருகிறது. இவரது நடிப்பு வாழ்க்கையின் சிறந்த நடிப்பாற்றல்களில் இப்படம் இடம் பெரும் என கூறப்படுகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் சிறந்த படங்களின் பட்டியலில் ‘பார்ட்டி’ படம் நிச்சயம் இடம் பெரும் எனவும் சத்யராஜின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.
இப்படத்தை ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T சிவா தயாரித்துவருகிறார். வெங்கட் பிரபு-T சிவா கூட்டணி ஏற்கனவே ‘சரோஜா’ என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி ‘பார்ட்டி’ படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.