நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், ஆனால் தனது சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு வரட்டும் என காமெடி நடிகர் சிங்கமுத்து சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் பற்றி சிங்கமுத்து கூறியுள்ளதாவது..”நடிகர் ரஜினிகாந்த் வயதாகி முதுமை கண்டு விட்டார். இனி அவர் அரசியலுக்கு வந்து எந்த பலனும் இல்லை. இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்று ரஜினி கூறுகிறார்.””அவர் சம்பாதித்த பணத்தில் இது வரை எவ்வளவு பணத்தை மக்களுக்காக செலவு செய்துள்ளார்? ரஜினி நடிக்கலாம்; சம்பாதிக்கலாம்; ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படக்கூடாது. தனது சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு ரஜினி அரசியலுக்கு வரட்டும்” என சிங்கமுத்து கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .