அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் மெர்சல். தேனாண்டாள் பட நிறுவனம் தனது 100வது படமாக தயாரித்துள்ளனர். இந்நிலையில்,நேற்று(செப்.,21) இப்படத்தின் டீசர் வெளியாகி இணையதள ரசிகர்களால் டிரண்ட்டாகி, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் மெர்சல் படத்திந தலைப்பு தனக்கு தான் சொந்தம் எனக்கூறி, தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், ஏ.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் “மெர்சலாயிட்டேன்” என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன். இதற்கான தலைப்பை 2014-ம் ஆண்டில் முறைப்படி பதிவு செய்திருக்கிறேன். ஆகவே, மெர்சல் படத்தின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த கோர்ட், வரும் அக்., 3-ம் தேதி வரை மெர்சல் படத்தின் விளம்பரத்தில் மெர்சல் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் படநிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.அதே சமயம் இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் இப் படத்தயாரிப்பாளர் முறையிட்டுள்ளார்.