பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கொடூர வில்லனாக களமிறங்கியவர் ஆர்.கே. சுரேஷ்.இதை தொடர்ந்து , தர்மதுரை, ஹரஹர மகாதேவகி,தனிமுகம்,வேட்டை நாய் உள்லிட்ட படங்களிலும் வில்லன் மற்றும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ஆர்.கே. சுரேஷ் சின்னத்திரையில் சுமங்கலி தொடர் நாயகி ,ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவ்யாவை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்து விட்டதாகவும், விரைவில் திருமனதேதியை அறிவிப்பதாகவும் தெரிவித்தார். கமல்ஹாசன் கட்சி தொடங்க உள்ளது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில்,’கமல்ஹாசன் எதை செய்தாலும் தீவிரமாக ஆழ்ந்து சிந்தித்து செயல்படக்கூடியவர். இம் மண்ணின் மைந்தர் அவர் அரசியல் கட்சி தொடங்கினால் நான் அவருக்கு பக்கபலமாக இருப்பேன்’ அவருடன் இணைந்து செயலாற்றுவேன் ‘என்றவர் ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்,’ரஜினி மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் அரசியல் அவருக்கு சரிவராது.அரசியலுக்கு அவரும் சரிபட்டு வரமாட்டார். ஆதலால் அரசியலுக்கு அவர் வந்தால் நான் ஆதரிக்க மாட்டேன். என்று கூறினார் இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.