மீடியன்ட்’ மனு குமாரன் மற்றும் “லைகர்” மனோஜ் கேசவன் இணைந்து தயாரிக்கும், இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் “பாரிஸ் பாரிஸ்” திரைப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுயஅடையாளத்தைக் கண்டுகொள்கிறாள்.


12.5 கோடி பட்ஜெட்டில் தயாரான “குயின்”, வசூலில் 97 கோடிகளைக் குவித்துச் சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.