சமீபகாலமாக தமிழக அரசை மிக கடுமையாக எதிர்த்து வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது, அரசியலுக்கு வருவேன் எனவும், மக்கள் விரும்பினால் முதல்வர் ஆவேன் எனவும் அறிவித்தார்.மேலும் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்றும் கூறி வரும் அவர், ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,’அரசியலுக்கு வந்த பின் நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை’ என்று கூறியுள்ளார். அதோடு ரஜினியும், நானும் ஏற்கெனவே அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியிருக்கிறோம். தற்போது நிலைமை மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றும் பேசியுள்ளார்.