ஒரு நாள் செல்போன் இல்லையென்றால், எந்தளவுக்கு ஸ்தம்பித்து போகிறது என்பது தான் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் .படத்தின் கதை!
நாயகன் நகுல், என்ஜினியரிங் படித்தவர் ,எதையாவது கண்டுபிடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர் .அவரின் குடும்பமே விஞ்ஞானி குடும்பம் தான் என்று சொல்லலாம் . தான் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல், தான் படித்த கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து கொடுத்தும்,அதற்கும் பணம் பெற்று வருகிறார்.
அதே கல்லூரியில் படித்துவரும் ஐஸ்வர்யா மேனனும், தனது புராஜெக்ட்டுக்காக நகுலின் உதவியை நாடுகிறார்.இச் சந்திப்புக்கு பின் நகுலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறார் . அதோடு இன்னொரு பக்க கதையாக,இன்னொரு நாயகனான தினேஷ் வீட்டு மனைகளை விற்பனை செய்பவராக இருக்கிறார். இவர் ஒருநாள் வங்கியில் பணிபுரியும் பிந்துமாதவியை சந்திக்கிறார். பிந்துமாதவி, தற்கொலை சிந்தனை ,வாழ்கையில் விரக்தியடைந்தவர்களுக்கு,தன்னம்பிக்கை அளித்து இலவசமாக கவுன்சிலிங் செய்கிறார். அப்போது,வேறு ஒருவருக்கு கவுன்சிலிங் செய்வதற்கு பதில், தினேஷுக்கு தவறுதலாக கவுன்சிலிங் செய்கிறார். பிந்துமாதவியின் ஆதரவான வார்த்தைகள் தினேஷை மயக்க, அவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால், பிந்து மாதவியோ இந்த காதலை ஏற்க மறுக்கிறார். இறுதியில் தினேஷை காதலிக்கவும் தொடங்குகிறார். தன் காதலை சொல்ல தினேஷை தேடி ச் செல்லும் பிந்து மாதவி தவறுதலாக ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார். அந்த பள்ளத்திற்கு மேலே இருக்கும் மிகப்பெரிய ‘கல்’ ஒன்று பள்ளத்திற்குள் விழ தயாராக இருக்கிறது. எனவே, உடனடியாக தனது போனில் தினேஷை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்.அதே சமயம்,வெடிகுண்டு ஒன்றை வைக்கும் தீவிரவாதி ஓருவன், அதை செல்போன் மூலமாக இயக்கி சென்னையின் முக்கிய இடத்தில் வெடிக்க வைக்க சதி செய்கிறான். இந்த நிகழ்வுகள் எல்லாம் ஒரே சமயத்தில் நடந்து கொண்டிருக்கும்போது, சென்னையில் காந்த ப்புயல் காரணமாக செல்போன் டவர்கள் எல்லாம் செயலிழந்து போகின்றன. இதை சரிசெய்ய நகு ல் முயற்சிக்கிறார். செல்போன் டவர் செயல் படத் தொடங்கினால் குண்டு வெடித்து பலபேர் மாண்டு போகும் அபாயமும் உள்ளது. இறுதியில் அந்த செல்போன் டவர்களை எல்லாம் நகுல் வேலை செய்ய வைத்தாரா? பிந்து மாதவி பள்ளத்தில் இருந்து தப்பித்தாரா? தீவிரவாதி வெடிகுண்டை வெடிக்க வைத்தாரா? இல்லையா! என்பதே மீதிக்கதை. நகுல் படம் முழுக்க எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்திருக்கிறார்.ஆனால், பரபரப்பான ஜெட் வேகக் காட்சிகளிலும் இதேபோல் நடித்திருப்பது அவரின் மீது சலிப்பையே ஏற்படுத்துகிறது. நாயகிகளுள் ஒருவராக வரும் ஐஸ்வர்யா மேனன் காலேஜ் பெண்ணாக மிகவும் பொருந்தி போகிறார்.
மற்றொரு நாயகனாக வரும் அட்டக்கத்தி தினேஷின் நடிப்பு அவரின் முந்தைய படங்களை யே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. படம் முழுக்க சேலையுடன் பவனி வரும் பிந்து மாதவி அழகு தேவதை. இவர் பேசும் அன்பான வார்த்தைகள் நம்மையும் ஈர்க்கிறது. ஐஸ்வர்யா தத்தாவுக்கு தரும் புராஜக்ட் பேப்பரில் எழுத்துக்கள் தெரியா வண்ணம் எழுதி தந்து, அதில் ஒரு கெமிக்கலை தௌித்ததும் எழுத்துக்கள் பளிச்சிட வைப்பதில் தொடங்கி, தனது சோலார் பவர் பைக் மூலம் சூரிய புயலில் செயல் இழக்கும் செல்போன் டவரை உயிர்பிக்க செய்வது வரை ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன.?என்ற ஆவலை தூண்டுகிறது என்றாலும் அதற்கேற்ற காட்சி யமைப்புகள் இல்லாததால் சோர்வே மிஞ்சுகிறது.தமனின் இசையில் பாடல்கள் மனதில் தங்க மறுத்து அடம் பிடிக்கின்றன. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். செந்தில்குமாரின் வசனங்களும்,தீபக்குமார் ஒளிப்பதிவு ம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
சதீஷுக்கென்று இப்படத்தில் தனி டிராக். இவருக்கும் ஜோடி உண்டு. இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தால் அனைவரையும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.. தீவிரவாதியாக வரும் ஆசிப், செல்போன் திருடன் ரமேஷாக வரும் அஜய், நகுலின் அம்மாவாக வரும்ஊர்வசி, மனோபாலா வரும் காட்சிகளும் கலகல. செல்போன் டவர்களை வேலை செய்ய வைக்கும் டெக்னாலஜியை பற்றி நகுல் விளக்கி கூறும் காட்சிகள் படத்தில் நடித்தவர்களுக்கே புரியாத போது, அதை பார்க்கும் ரசிகர்கள் புரிந்துகொள்வார்களா? என்பது சந்தேகம் தான்.
அதே போல், கிளைமாக்ஸ் காட்சியை பரபரப்பே இல்லாமல் சொதப்பலாக காட்சிப்படுத்தியிருப்பது பெரிய பலவீனம். திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நடிகர்கள் : நகுல்,தினேஷ் நடிகை : பிந்துமாதவி .இயக்குனர் : ராம் பிரகாஷ் ராயப்பா இசை : தமன். ஓளிப்பதிவு : தீபக் குமார்.