‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’, ‘தர்மபுரி’ என முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கிய பேரரசு, முதல் முறையாக புதுமுகங்களை வைத்து ‘திகார்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நாயகனாக நடிக்க, நாயகியாக அகன்ஷா பூரி அறிமுகமாகிறார். இவர்களுடன் பார்த்திபன், மனோஜ் கே.ஜெயன், ரியாஸ்கான், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மலையாளத்தில் மம்முட்டி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ‘சாம்ராஜ்யம்’ படத்தின் கதையை தொடர்ச்சியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘திகார்’ அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷபீர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (நவ.26) சென்னையில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், சமூக சேவகியுமான கிரண்பேடி கலந்துக்கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட, சுதந்திரத்தியாகி வா.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாரிசு சி.வா.சிதம்பரம் பெற்றுக்கொள்கிறார்.