ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா காலமாகி விட்டதால் காலியான ஆர்.கே.நகர தொகுதி யில், வரும் 21ம் தேதி, இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன் களமிறங்குகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார்.சசிகலா அணி சார்பில், சுயேட்சையாக டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.
நாம் தமிழர்கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில், தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.விஷாலுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன்பிரசாரம் செய்வார் என்கிறார்கள்.