சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு பொதுக்குழு கூட்டம் துவங்கும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை வந்திருந்தனர். ஆனால் நண்பகல் கூட்டம் 12 மணிக்குத்தான் பொதுக்குழு தொடங்கியது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கிய சில நிமிடங்களில், தற்போதைய தலைவர் விஷாலுக்கு எதிராக அவரது சில தயாரிப்பாளர்கள் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாகக்கூறி கோஷங்கள் எழுப்பினர்.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நலனுக்கு எதிராகவும், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும் தலைவர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முயற்சிகள் எடுத்தது தொடர்பாக அவர்கள் முதலில் கேள்விகளை எழுப்பினர்.மேலும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக வங்கி வைப்பு நிதியில் இருந்த 7 கோடி ரூபாய் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது.திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலனுக்காக எதுவும் செய்ய இயலாவிட்டால், நீங்கள் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விடுங்கள் என்றும் சேரன் அணியினர் தொடர்ந்து விஷாலை நோக்கி கேள்விகளை எழுப்பினார்கள்.எதிர் தரப்பினரின் இந்த கேள்விகளுக்கு, அடுத்த பொதுக்குழுவில் உரிய விளக்கங்கள் அளிக்கப்படும் என்று விஷால் தரப்பு பதிலளித்தது இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கடும் மோதல் உருவாகும் சூழல் உருவானது.இதையடுத்து எழுந்த பதட்டமான சூழலின் காரணமாக அவசரமாக தேசிய கீதம் ஒளிபரப்பட்டு, பொதுக்குழுக் கூட்டம் பாதியிலேயே முடிவுக்கு வந்தது, இதன் காரணமாக எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் வெறும் 20 நிமிடங்களில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு முடிந்தது.