எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் தனது 22 வயதில் தயாரிப்பாளராகி இருக்கிறார். தனது கதிரவன் ஸ்டுடியோஸ் படநிறுவனம் சார்பில் அவர் தயாரித்து வரும் புதிய படத்துக்கு , ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ .என பெயரிட்டுள்ளார்.பூவரசன், விஜய்கார்த்திக், விக்கிஆதித்யா, சபரி என நான்குபேர்கதா நாயகர்களாக வும், டெல்லி விளம்பர மாடல் அனுபமா பிரகாஷ் கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் ரூபாஸ்ரீ. சத்யா, நிவிஷா என மேலும் மூன்று புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.இப் படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி, இயக்குனராக அறிமுகமாகும் ஏ.கேசவன் கூறியதாவது,.காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை.இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம். கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறது.கோவை,மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படத்தில் 5 பாடல்கள். எல்லாவற்றையும் வைரமுத்து எழுதியுள்ளார். ஐந்தும் வெவ்வேறு நிறம் வெவ்வேறு தளம் என்று சொல்லும்படி இருக்கும். நட்பு, காதல்,பயணம், தோல்வி, தாய்ப்பாசம் இப்படி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப்பேசும்.என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை நவநீதன் கவனிக்க,டேவிட் ஷார்ன் இசையமைத்து வருகிறார்.