தமிழக அரசையும் ,அரசியல் வாதிகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வந்த உலக நாயகன் கமல் ஹாசன், அமெரிக்காவில் தான் இயக்கி,தயாரித்து,நடித்து வரும் விஸ்வரூபம் 2 பட வேலைகளில் பிசியாக இருப்பதால், தற்போது ட்விட்டர் பக்கம் பெரும் பாலும் வருவது இல்லை. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கமல்ஹாசன் ஏதாவது ட்வீட் போடுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் டுவிட் ஏதும் போடவில்லை.ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், நடிகர் விஷால் வேட்பு மனு நிராகரிப்பு , பணப் பட்டுவாடா உள்ளிட்ட எந்த விவகாரம் குறித்தும் டுவிட்டரில் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இன்று 6 வது நாள் ரசிகர் சந்திப்பில் ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்து அறிவித்த நிலையில், கமல் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ‘புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.’புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும் அதிலும் ‘இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்’ என குறிபிட்டுள்ளார்