தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என அறிவித்த ரஜினிகாந்த் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார் . இன்று மாலை சரியாக, 7..55 மணியளவில் கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து கருணாநிதியின் அறைக்கு சென்ற ரஜினிகாந்த்,கருணாநிதியை சந்தித்து வணக்கம் தெரிவித்தார். பின்னர் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.