கடந்த டிசம்பர் 31-ம் தேதி அரசியல் அறிவிப்பு, புத்தாண்டில் ரஜினி மன்றம் இணைய தளம் மற்றும் செயலி அறிவிப்பு, அடுத்த நாளே செய்தியாளர் சந்திப்பு, நேற்று கருணாநிதியுடன் சந்திப்பு, இன்று ஆர்எம் வீரப்பனிடம் ஆசி பெற்றது என தொடர்ந்து அரசியல் களத்தை சூடாகவே வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் திரையுலகிலிருந்து நடிகர் ராகவாலாரன்ஸ் வரும் 7 ம தேதியன்று மதுரையில் ரஜினிரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால்.
செய்தியாளர்களிடம் கூறியதாவது,, “கட்சி தொடங்கி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக ரஜினி சார் அறிவித்துள்ளார். அரசியல் என்பதும் சமூக சேவைதான். தலைவன் அரசியல்ல இறங்கிட்டார். நான் அவருக்குத் தொண்டனா ரோட்ல இறங்கி அத்தனை தொகுதியிலும் பிரச்சாரம் பண்ணுவேன். அவருக்கு உதவியா இருப்பேன்,” என்று கூறினார். கமல் கட்சி தொடங்குவது குறித்து முன்பு ,விஷால் கமல் கட்சி தொடங்கினால் அவரை நான் வரவேற்பே ன், ஆதரிப்பேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது தற்போது ரஜினிக்காக பிரசாரம் செய்வேன் என கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.