குலேபகாவலி – விமர்சனம்.
மதிப்பீடு 2 / 5
நடிகர்கள் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சத்யன், மன்சூர் அலி கான், ராஜேந்திரன், யோகி பாபு, அம்பானி சங்கர், ராம்தாஸ், மதுசூதனன் ராவ், ஆனந்தராஜ்….
இயக்கம் கல்யாண்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து பிரிட்டிஷ்காரார்கள் மதராசை விட்டு வெளியேறும்போது ஒரு வெள்ளைய அதிகாரி , இந்தியாவில் கொள்ளையடித்த வைரக்கற்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் வேலை செய்யும் ‘நம்ம’ ஆளைவைத்தே அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு தன்னுடன் கப்பலுக்கு வரச் சொல்கிறார். கப்பல் கிளம்பும் அவசரத்தில் வெள்ளைக்கார அதிகாரி அவசரமாக செல்ல நம்ம ஆள் கீழே விழ, பெட்டி தானாக திறந்து அதிலிருந்து வைரகற்கள் சிதறுகிறது.இன்ப அதிர்ச்சியில் திளைக்கும் நம்ம ஆள், அவற்றை சத்தமிலாமல் தான் கட்டியிருந்த வேட்டியில் அள்ளிப்போட்டு ஒளித்துவைத்துவிட்டு, வெறும் கல்லைமட்டும் நிரப்பி பெட்டியை வெள்ளைக்காரனிடம் கொடுத்து விடுகிறார். அந்த வைரங்களை ஒரு பெட்டியில் வைத்து ‘குலேபகாவலி’ எனும் கிராமத்தில் அந்த ஊர் கோவிலையொட்டி கொண்டுபோய்ப் புதைத்து விடுகிறார் . இதற்கிடையே பிரபுதேவா, யோகிபாபு ஆகி இருவரும் சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வரும் மன்சூர் அலிகானுக்கு உதவியாக இருந்து வருகின்றனர். அதே போல் டான்சர் ஹன்சிகா தன தங்கைக்காக சிறு சிறு,மோசடி செயல்களில் ஈடுபடுபவர். ரேவதி ஒரு பலே கார் திருடி. சத்யன் சிறுவயதிலிருந்து யாரிடமாவது ஏமாந்து கொண்டேயிருக்கும் அப்பாவி இன்ஸ்பெக்டர . இவர்கள் அனைவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் வில்லன் மது சூதனன் ராவுக்கு ‘குலேபகாவலி’ எனும் ஊரில் வெள்ளைக்காரனிடம் வேலைபார்த்த தன் தாத்தா புதைத்து வைத்த வைரப் பெட்டியைப் பற்றித் தெரிய வருகி கிறது. இதையடுத்து அவர் தன் மச்சான் ஆனந்தராஜோடு இணைந்து அந்த வைரப் பெட்டியை எடுக்கத் திட்டமிடுகிறார். அந்தப் பெட்டியை எடுக்க, தங்களிடம் மாட்டிக்கொள்ளும் பிரபுதேவா, ஹன்சிகா மற்றும் முனீஸ்காந்தை குலேபகாவலிக்கு அனுப்புகிறார்கள் வில்லன் ஆனந்த் ராஜ் டீம். இதற்கிடையே போகும் வழியிலேயே அந்த பெட்டியை எடுத்து தாங்களே பங்கு போட்டுக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கிறது பிரபுதேவா டீம். போகும் வழியில் ரேவதி கொள்ளையடித்து வரும் காரில் ஏறிக்கொள்ள, அவரும் இவர்களின் பார்ட்னர் ஆகிறார். இவர்களைத்தேடி, பிரபுதேவா கடத்திய சிலைகளைத் தேடி மன்சூர் அலிகானும், தங்களை ஏமாற்றிய ரேவதியைத் தேடி மொட்டை ராஜேந்திரன் , சத்யன்கோஷ்டியும் விரட்டுகிறார்கள். இறுதியில், பிரபுதேவாடீம் குலேபகாவலிக்குச் சென்று அந்தப் புதையலை எடுத்தார்களா,இல்லையா?வில்லன் கோஷ்டி இவர்களை என்ன செய்தது என்பது தான் மீதிக்கதை.
சிலை கடத்தல், ரேவதியின் கார் திருட்டு , ஹன்சிகாவின் மோசடி என இவர்களின் சுவாரசியமான அறிமுகத்தோடு விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது படம்.பிரபுதேவா நடனம் பழைய வேகம் அப்படியே இருக்கிறது.மிரள வைக்கிறார். கார் திருடியாக வரும் ரேவதி பல காட்சிகளில் நம் மனதையும் திருடுகிறார். ஹன்ஷிகா வழக்கம் போலவே பாடுகிறார் ஆடுகிறார். ஓடுகிறார்.பாபுவாக வரும் யோகிபாபு பல காட்சிகளில் சிரிக்க வைத்துவிடுகிறார்.மொட்டை ராஜேந்திரன் காட்சிகள் ஏனோ சற்று நாடகத்தனமாகவே இருக்கிறது .ஆனால், படம் முழுவதும் வரும் நகைச்சுவை காட்சிகளும், சின்னச் சின்னத் திருப்பங்களும் சற்று ஆறுதல். இப்படக்குழுவுக்கு உலகநாயகன் மீது என்ன கோபமோ தெரிய வில்லை. அவரைப்ப் போல ஒருவரை மொட்டை ராஜேந்திரன் குழுவில் வைத்து, படம் முழுவதும் கமலை கலாய் க்கவும் செய்வது ஏகத்துக்கும் ரகளை. திடீர் திடீரென இடம்பெறும் பாடல்கள், மனதில் ஒட்டாத காட்சிகள், கதாபாத்திரங்கள் சதா பேசிக்கொண்டேயிருப்பது என இயக்குனர் பல இடங்களில் நம்மை சோர்வடைய செய்து விடுகிறார்.அதே போல் அடுத்தடுத்து வரும் காட்சிகளை சுலபமாக யூகிக்க முடிகிறது. சில தேவையில்லாத காட்சிகளின் நீளமும் படத்தின் பலவீனம் .கச்சிதமான திரைக்கதையோடு, தேவையில்லாத காட்சிகளையும், பாடல்களையும் தவிர்த்து இருந்தால் ரசிகர்களுக்கு ஒரு நல்ல காமெடி ப்படம் கிடைத்திருக்கும்.