இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது!
குடியரசுத் தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2017-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இளையராஜா பேசுகையில்,, “பத்ம விபூஷண் விருது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசு என்னைக் கவுரவித்ததாகக் கருதவில்லை, தமிழகத்தையும் தமிழக மக்களையும் கவுரவித்ததாகக் கருதுகிறேன், விழாவில் கலந்து கொள்வதாக நான் தெரிவித்திருந்தேன்” என்றார்.இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அளிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், பாஜகவின் எச்.ராஜா உள்ளிடோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.விஜயகாந்த் கூறியதாவது,: கிராமிய இசையை உலக அரங்கிற்கு எடுத்துசென்று தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியவர். இசைத்துறையில் தனக்கென தனிமுத்திரையை பதித்தவர் இளையராஜா. இளையராஜா மேலும் பல விருதுகளை பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.ரஜினிகாந்த் இளையாராஜாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,: எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதாமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர். விருதும், நாடும், தமிழகமும் பெருமை கொள்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்