பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது பத்மவிபூஷண். 68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம்.
ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இல்லை. அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது.பஞ்சு அருணாசலம் அவர்களால்’அன்னக்கிளி’- படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.50-க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்துபடங்களின் வெற்றிக்கு ஆணிவேராகஇருந்திருக்கிறார் .எனது 100-வது படம் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி ‘-‘ சிந்துபைரவி ‘-படங்களின் வெற்றியில் பெரும் பங்கு அவருடையது. தன் வாழ்நாளை இசைக்காகவே
அர்ப்பணித்த அபூர்வ கலைஞர்.அவரால் கலையுலகும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப் பட்டிருக்கிறது.
எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அவர் இசையுலகில் சாதித்ததற்கு அவை ஈடாக முடியாது.வாழ்க இசைஞானி .
ஓங்குக அவர் புகழ் !!⁃சிவகுமார்⁃திரைப்படக்கலைஞர்