நடுத்தர வாழ்வின் அழுத்தங்களாலும் கணவனின் அலட்சியத்தாலும் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழும் லட்சுமி என்கிற பெண், தினசரி வேலைக்குச் சென்றுவரும் ரயிலில் சந்திக்கும் கதிர் என்கிற இளைஞனுடன் ஒருநாள் இரவைக் கழிப்பதுதான் லட்சுமி குறும்படத்தின் கதை.இந்தப் படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தது.இந்தப் படத்தில் பாரதியாரின் கவிதை ஒன்றைப் பயன்படுத்தியிருப்பதை வைத்து, பாரதி இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகப் பலர் பொங்கி எழுந்தனர். ஒரு குறிப்பிட்ட காட்சி இளைஞர்களிடையே வைரலானது. இந்நிலையில்,’லட்சுமி’யை இயக்கிய சர்ஜுன் புதிய படமொன்றை இயக்குகிறார். ‘அறம்’ படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலை தயாரிப்பாளர் கோட்டபடி ரமேஷ் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். மற்ற நடிகர்,நடிகைகள் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த விவரங்களையும் வெளியிடப்படவில்லை. இப்படமும் சர்ச்சையில் சிக்குமா என்பதே தற்போது ரசிகர்களிடையே விவாதமாகி வருகிறது