ஸ்ரேயாவுக்கு டும்…டும்…!
2001-ம் ஆண்டு வெளிவந்த ‘இஷ்டம்’ தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் 2003-ம் ஆண்டு வெளிவந்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு ‘மழை’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007-ல் வெளிவந்த ‘சிவாஜி’ வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால், வடிவேலுவுடன்’இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ படத்தில் ஒரு பாடலுக்கு அவர் ஆட்டம் போட்டது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதையடுத்து,ஸ்ரேயாவை முன்னணி ஹீரோக்கள் யாரும் அவர்களது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. இதையடுத்து .தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார் ஸ்ரேயா. அவர் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘காயத்ரி’ விரைவில் வெளியாக உள்ளது. தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள ‘நரகாசூரன்’ படமும் வெளிவர உள்ளது.இதற்கிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவியுள்ளது. ஸ்ரேயா தற்போது அவரதுகாதலர் குடும்பத்தாரைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.