75 வயதிலும் இந்தி சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார அமிதாப் பச்சன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது தோள்பட்டையில் சமீபத்தில் காயம் பட்ட நிலையில் அவருக்கு தற்போது முதுகுத்தண்டு மற்றும் கழுத்தில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமிதாப் வழக்கமான மருத்துவபரிசோதனைக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவமனை வட்டாரம் கூறியுள்ளது.