லிங்கா படம் வாங்கி வெளியிட்ட வகையில் நஷ்டம் அடைந்துள்ள விநியோகஸ்தர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நஷ்டஈடு வழங்கப்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்து சரத்குமார் கூறியதாவது,லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து ரஜினிகாந்த் அழைப்பின் பேரில் நான் அவரை சந்தித்து பேசினேன். அவரும் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார். இதன் காரணமாக மனிதாபிமான அடிப்படையில் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர்களுக்கு உதவுவதாக கூறினார். இதன் காரணமாக இரண்டொரு நாளில் இப்பிரச்சனை முடிவுக்கு வந்து விடும். மேலும் இப்பிரச்சனை வரும் காலத்தில் மோசமான முன்னுதாரனாமாகி விடும் என்பதால் படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிவெடுத்து ,இது போன்ற சம்பவங்களை தடுக்க புதிய சட்டம் இயற்றவும் முடிவு செய்ய ப்பட்டுள்ளது. தற்போது திருட்டு வி.சிடி. பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளதால் இதை தடுக்க கடுமையான சட்டத்தின் மூலம் அவர்களை தண்டிக்க வேண்டும் .அப்போது தான் சினிமா அழிவதை தடுக்க முடியும் .இது குறித்து முடிவெடுக்க .மேலும் திரையுலகின் பல்வேறு அமைப்புகள் ஓன்று கூடி விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளது. படத்தின் பட்ஜெட் அதிகமாகும் விசயத்தில்,நடிகர்கள் சம்பள பிரச்னை குறித்து தயாரிப்பாளர் சங்கம் தான் முடிவெடுக்க வேண்டும். திருட்டு வி.சி.டி க்கு காரணமாக வெளிநாடுகளில் சில தமிழர்களே பின்னணியில் இருப்பது வேதனையாக உள்ளது . திருட்டு வி.சி.டி. பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக இயக்குனர் சேரனின் சி.2ஹெச் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஓன்று . இவ்வாறு அவர் கூறினார்.